மாரியம்மன் கோவில் திருவிழா
ADDED :4810 days ago
தர்மபுரி: தர்மபுரி முனியப்பன செட்டி தெரு சமயபுரம் மாரியம்மன் கோவிலில், 13ம் ஆண்டு திருவிழா நடந்தது.விழாவையொட்டி நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அலங்காரம் நடந்தது. பக்தர்கள் பூக்கரகம், குழந்தை பொம்மை, அக்னி சட்டி, மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை (ஆக., 19) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் பூசாரிகள் சங்கர், கார்த்திகேயன், சேஷாத்திரி, பழனி, ஓம்சக்தி ராஜா, பசுபதி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.