அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா துவங்கியது
ADDED :1242 days ago
பழநி: பழநி,பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி மாத பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
பழநி கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் அதிகாலை சிறப்பு பூஜைகளுடன் ஆவணி பிரம்மோற்சவ திருவிழா துவங்கியது. இதில் ஸ்ரீதேவி பூதேவி சமேத அகோபில வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக கோயில் கொடி மரத்தின் முன் சங்கு சக்கரம் கருடாழ்வார் வரையப்பட்ட மஞ்சள் நிறக் கொடிக்கு சிறப்பு பூஜை தீபாதாரணை நடைபெற்று ஆவணி பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. இத்திருவிழாவில் செப் 10ல் திருக்கல்யாணமும், செப் 12ல் திருத்தேரோட்டமும் நடைபெறும். செப் 14ல் கொடியிறக்குதல் நடைபெறும். கொடி ஏற்ற நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் நடராஜன் உற்பட பலர் கலந்து கொண்டனர்.