பெரியாக்குறிச்சி தக்ஷிண விநாயகர் கோவிலில் திருக்கல்யாணம்
ADDED :1173 days ago
மந்தாரக்குப்பம்,: பெரியாக்குறிச்சி தக்ஷிண விநாயகர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. மந்தாரக்குப்பம் அடுத்த பெரியாக்குறிச்சி தக்ஷிண விநாயகர் கோவிலில் 19ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடந்து வருகிறது. தினசரி சிறப்பு பூஜை , தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் இரவு விநாயகருக்கு திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடந்தது.
வீதியுலா நடைபெற்று, விநாயகர் சிலை விஜர்சனம் செய்யப்படுகிறது.