உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நரியை பரியாக்கிய திருவிளையாடலுக்காக மாணிக்க வாசகர் புறப்பட்டார்

நரியை பரியாக்கிய திருவிளையாடலுக்காக மாணிக்க வாசகர் புறப்பட்டார்

மேலூர்: மதுரையில் நடைபெறும் ஆவணிமூலத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் இருந்து மாணிக்க வாசகர் நேற்று புறப்பட்டார் இன்று (செப். 5) ல் ஆடி வீதி பதினாறு கால் மண்டபத்தில் நரியை பரியாக்கிய திருவிளையாடலும், செப். 6 ல் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழாவும், செப்.7,8 மீனாட்சி சுந்தரேசுவரருடன் திருவீதி உலா நடைபெறுகிறது. செப். 9 ல் மீனாட்சி சுந்தரேஸ்வரரிடம் இருந்து விடைபெறும் மாணிக்க வாசகர் செப். 14 ல் கோயிலை வந்தடைகிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், துணை ஆணையர் அருணாச்சலம், பேஷ்கார் வெங்கடேசன், கணக்கர் சீனிவாசன் ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !