கள்ளக்குறிச்சி செல்லியம்மன் கோவில் தேர் திருவிழா
ADDED :1171 days ago
கள்ளக்குறிச்சி: அகரகோட்டாலத்தில் செல்லியம்மன் கோவில் தேர்திருவிழா நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த அகரகோட்டாலத்தில் உள்ள அய்யனார் சுவாமி ஊரணி பொங்கல், மாரியம்மன், செல்லியம்மன் சுவாமிகோவில் தேர்திருவிழா கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி அம்மனுக்கு பூ போடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.தொடர்ந்து,கிருஷ்ணர் பிறப்பு, அக்னிமலை, திருவண்ணாமலை சரித்திரம், மாரியம்மன் பிறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி ஊரணி பொங்கல், சுவாமி வீதியுலா நடந்தது.நேற்று முன்தினம் தேர்திருவிழா நடந்தது. மதியம் 1:30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் செல்லியம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்தனர்.