சிவகங்கை தூய அலங்கார அன்னை தேர்பவனி
ADDED :4864 days ago
சிவகங்கை:சிவகங்கை தூய அலங்கார அன்னை திருவிழாவை முன்னிட்டு தேர்பவனி நடந்தது. ஆலயவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. விழாவின் 9ம் நாளன்று மாலை 6 மணிக்கு தேர் பவனி நடந்தது. சிவகங்கை ஆயர் சூசைமாணிக்கம் தலைமை வகித்தார். தேர்பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. அருட்தந்தையர்கள் சேவியர், சவரிமுத்து சிறப்பு திருப்பலி நடத்தினர். சிறப்பு திருப்பலியை தொடர்ந்து 8. 30 மணிக்கு நன்றி திருப்பலியுடன் கொடியிறக்கம் நடந்தது. விழாவில், பங்கு இறைமக்கள், பேரவையினர் பங்கேற்றனர்.