விநாயகர் சதுர்த்தி விழா குன்னூரில் 108 சிலைகள்
ADDED :4810 days ago
குன்னூர்:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குன்னூர் ஒன்றியத்தில் 108 விநாயகர் சிலைகள் அமைக்க இந்து முன்னணி முடிவு செய்துள்ளது.விநாயகர் சதுர்த்தி விழா குறித்த செயற்குழு கூட்டம் குன்னூரில் நடந்தது. இதில், நகர பொது செயலாளர் சசிகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஹரிஹரன் மற்றும் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.கூட்டத்தில், குன்னூர் நகரம் மற்றும் ஒன்றியத்தில் 108 விநாயகர் சிலைகள் வைக்க முடிவு செய்யப்பட்டது. செப்டம்பர் மாதம் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை வெகு விமரிசையாக விழா கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்
டது.ஒன்றிய செயலாளர் கார்த்திக், நகர பொருளாளர் சுரேஷ்குமார் மற்றும் சங்க நிர்வாகிகள் ராஜா, பிரகாஷ், கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.