திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் அவதார உற்சவம் அழைப்பிதழ் வெளியீடு
ADDED :1167 days ago
கடலுார்: திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் கோவிலில் அவதார உற்சவத்தின் அழைப்பிதழ் வெளியீடு நிகழ்ச்சி நடந்தது. திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் கோவிலில் 652ம் ஐப்பசி திருமூல அவதார உற்சவம் அக்., 20ம் தேதி முதல், 29ம் தேதி வரை நடக்கிறது. உற்சவத்தின் அழைப்பிதழ் வெளியீடு நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடந்தது. அப்பன் ப்ரணதாத்திஹராசார்யா சுவாமிகள் அழைப்பிதழ் வெளியிட்டார். பின்னர், சுவாமிக்கு திருமூல நட்சத்திரத்தையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று, பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.