பிரதமருக்காக மடப்புரத்தில் வேண்டுதல் நிறைவேற்றிய வேலூர் இப்ராஹிம்
ADDED :1210 days ago
திருப்புவனம்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பா.ஜ., தேசிய செயலர் வேலூர் இப்ராஹிம் அம்மன் தரிசனம் செய்தார். பா.ஜ.,தேசிய செயலர் வேலூர் இப்ராஹிம் நேற்று மடப்புரம் காளியம்மனை தரிசனம் செய்தார்.
அவர் கூறுகையில்: பாரதீய ஜனதா கட்சி சிறுபான்மையினருக்கு உரிய அங்கீகாரம் அளித்து வருகிறது. பிரதமர் மோடியின் ஆட்சி சிறப்பாக அமைந்துள்ளது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு வாய்ந்த கோயில், தேவாலயம், பள்ளிவாசல் உள்ளிட்டவற்றில் தரிசனம் செய்வது வழக்கம், அதனடிப்படையில் மடப்புரம் காளியம்மனை தரிசனம் செய்ததுடன் பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் வாழவும் வேண்டி கொண்டேன், என்றார்.