அனுமதி பெறுங்கள்
ADDED :1130 days ago
அடுத்தவர் வீட்டிற்கு செல்பவரின் கண்கள் சில நேரங்களில் அங்குள்ள பொருட்களை பார்க்கும். இவர், நம் உறவினர் தானே, நண்பர் தானே சொல்லிக்கொள்ளலாம் என அதை உரிமையோடு பயன்படுத்துவர். செல்போனை எடுத்து தேவையின்றி பேசுவது, ரிமோட்டை எடுத்து டி.வி யின் சேனல்களை மாற்றுவது, அவர் வைத்திருக்கும் புத்தகத்தை எடுத்து படிப்பது, என தன் இஷ்டப்படி நடப்பார்கள். இதை தான் பிறருடைய பொருட்களை அவர் அனுமதி பெற்று பயன்படுத்துங்கள் என்கிறார் நாயகம்.