விருதுநகர் சொக்கநாத சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்
ADDED :1160 days ago
விருதுநகர்: விருதுநகர் சொக்கநாத சுவாமி கோயில் ஆவணித்திருவிழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் ஆவணி விழா கடந்த ஆக.,30ல் கொடியேற்றத் துடன் துவங்கியது. தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலித்தனர். நேற்றுமுன்தினம்திருக்கல்யாணம் நடந்த நிலையில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி மீனாட்சி அம்மன், சொக்கநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள், அபிஷே கங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 9:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. இதையடுத்து தேரானது மேலரதவீதியில் இருந்து புறப்பட்டு வெயிலுகந்தம்மன் கோயில் மெயின் பஜார், தெற்குரத வழியாக மீண்டும் சிவன் கோயில் வந்தடைந்தது, திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.