உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாயல்குடி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் பொங்கல் விழா

சாயல்குடி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் பொங்கல் விழா

சாயல்குடி: சாயல்குடி சாஸ்தா சுயம்புலிங்க சுவாமி கோயிலில் வருடாந்திர பொங்கல் விழா நடந்தது.

சாயல்குடி சுயம்புலிங்க நகரில் உள்ள சாஸ்தா செம்புலிங்க அய்யனார் சுயம்புலிங்க சுவாமி, பிரம்மசக்தி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. வருடாந்திர பொங்கல் விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம் செய்யப்பட்டு மாலையில் விளக்கு பூஜை நடந்தது. நேர்த்திக்கடன் பக்தர்களால் பால்குடம் எடுத்து கொண்டு வரப்பட்டு பாலாபிஷேகம் நடந்தது. பூத்தட்டு ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பூவன் நாடார் வகையறா பங்காளிகள் செய்திருந்தனர். அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !