சின்னாண்டி வலசையில் கும்பாபிஷேக விழா
ADDED :1128 days ago
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே சின்னாண்டிவலசையில் உள்ள கற்பக விநாயகர், முத்துமாரியம்மன், தர்ம முனீஸ்வரர், நொண்டி கருப்பண்ண சாமி கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த செப். 5 அன்று முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவுக்கு பின்பு கோ பூஜை, நாடி சந்தனம், பூர்ணாகுதி உள்ளிட்டவைகள் நடந்தது. காலை 10 மணி அளவில் கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி அர்ச்சகர் குழுவினர் கும்பாபிஷேகம் செய்தனர். முத்துமாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 11 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சின்னாண்டி வலசை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.