எமனேஸ்வரம் வண்டியூர் ஐயப்பன், கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம்
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம், வண்டியூரில் அமைந்துள்ள ஐயப்பன், கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.
இங்கு செப். 6 காலை 8:00 மணி முதல் அனுக்கை, கோ பூஜை, சுமங்கலி பூஜை நடந்தது. அன்று மாலை வாஸ்து சாந்தியும், இரவு 8:00 மணி முதல் காலையாக பூஜை துவங்கியது. செப். 7 அன்று இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகளும் நடத்தப்பட்டன. தொடர்ந்து இன்று காலை நான்காம் கால யாக பூஜைகள் துவங்கி, 10:00 மணிக்கு மகாபூர்ணாகுதி நடந்தது. பின்னர் தீர்த்த குடங்கள் புறப்பாடாகி, காலை 11:00 மணிக்கு ஐயப்ப சுவாமி, கருப்பண சுவாமி விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஐயப்பன், கன்னிமூல கணபதி, மாளிகை புரத்தம்மன், நாகராஜர், கருப்பணசாமி, துவார பாலகர்கள் மற்றும் தனி சன்னதியில் அருள்பாளிக்கும் பதினெட்டாம் படி கருப்பணசாமிக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு தீப ஆராதனைக்கு பின், பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.