திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
ADDED :1326 days ago
திருவண்ணாமலை:திருவண்ணாமலையில், இன்று மாலை 6:20 மணி முதல், நாளை மாலை, 4:30 வரை பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பல மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, கோவிலில் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதில், ஆவணி மாத பவுர்ணமி திதி, இன்று மாலை 6:20 மணி முதல், நாளை மாலை 4:30 வரை உள்ளது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.