உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வனசுந்தரி அம்மன் கோயிலில் முளைப்பாரி விழா

வனசுந்தரி அம்மன் கோயிலில் முளைப்பாரி விழா

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே தெற்குதரவை வனசுந்தரி அம்மன் கோயில் முளைப்பாரி விழாவை முன்னிட்டு தீச்சட்டி, பால்குடம் எடுத்து பக்த்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவை முன்னிட்டு ஊர் எல்லையில் உள்ள சீப்படையார் கிழவர் அய்யனார் கோயிலில் கரகம் கட்டி விழா கொண்டாடுவது வழக்கம். சில பிரச்னைகளால் அக்கோயில் பூட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று முன்தினம் கோயில் வாசலில் கரகம் கட்டி, தீச்சட்டி, இளநீர் காவடி எடுத்து வனசுந்தரி கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். நேற்று வேல்காவடி, பால்குடங்கள், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !