ஏகனாம்பேட்டை ராணியம்மன் கோவிலில் பூந்தேர் விழா
ADDED :1128 days ago
வாலாஜாபாத்: ஏகனாம்பேட்டை ராணியம்மன் கோவிலில், பூந்தேர் திருவிழா விமரிசையாக நடந்தது. வாலாஜாபாத் அடுத்த, ஏகனாம்பேட்டையில் ராணியம்மன் கோவில் உள்ளது. இங்கு, காப்பணி மகோற்சவ விழா, கடந்த 4ம் தேதியுடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை ராணியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.தொடர்ந்து, மதியம் 2:00 மணிக்கு கரக ஊர்வலமும், வேல் குத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு, பூந்தேர் ஊர்வலம் நடந்தது. பொய்கால் குதிரை மற்றும் கரகாட்டம் நடந்தது.