சிக்கல் சுள்ளக்கரை காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :1128 days ago
சிக்கல்: சிக்கலில் உள்ள சுள்ளக்கரை காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. அனுக்ஞை விக்னேஸ்வரர், வாஸ்து சாந்தி, எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் பின்பு, காலை 10 மணி அளவில் சுள்ளக்கரை காளியம்மன், முத்தாலம்மன், கருப்பண்ணசாமி, மகா கணபதி, முருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கோபுர விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி உத்தரகோசமங்கை சிவாச்சாரியார் முத்துக்குமார குருக்கள் கும்பாபிஷேகம் செய்தார். மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை குலாலர் சமூகத்தினர் செய்திருந்தனர்.