மொட்டணம்பட்டியில் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1128 days ago
வடமதுரை: வடமதுரை மொட்டணம்பட்டியில் ஸ்ரீ பெருமாள், வீரபாப்பம்மாள், வீரமல்லம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்றுமுன்தினம் காலை கணபதி பூஜையுடன் துவங்கிய கும்பாபிஷேக விழாவில் இரண்டு கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில் தலைமை அர்ச்சகர் ஜவஹர் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாட்டினை மொட்டணம்பட்டி, போஜனம்பட்டி, சிக்காளிபட்டி, சிக்குபோலகவுண்டன்பட்டி, ஓடைப்பட்டி, சுருளிப்பட்டி, மல்லிங்காபுரம், எஸ்.கே.புதூர், பண்ணைபுரம், திண்டுக்கல், ஸ்ரீரங்கம், கெச்சானிபட்டி, தென்னம்பட்டி, ஏ.குரும்பபட்டி, வேலாயுதம்பாளையம் ஊர்களில் வசிக்கும் காமுகுல ஒக்கலிக (காப்பு) உழுவினார் குல பங்காளிகள், திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.