சிதம்பரம் நடராஜர் கோயிலில் மகாபிஷேகம் : பக்தர்கள் தரிசனம்
ADDED :1128 days ago
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று நடந்த மகாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில், உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோவில், ஐம்பூதத் தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு வீற்றிருக்கும் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு ஆண்டுக்கு 6 முறை மகா அபிஷேகம் நடக்கிறது.அதன்படி, ஆவணி மாத மகாபிஷேகம் நேற்று நடந்தது. காலை சுவாமிக்கு விசேஷ பூஜை, லட்சார்ச்சனை, மகா ருத்ர ஜபம், மகா ருத்ர ஹோமம், மகா தீபாராதனை நடந்தது. மாலை வடுக பூஜை, கன்யா பூஜை, கோ பூஜை, கஜபூஜை, அஸ்வ பூஜை, மஹா தீபாராதனை நடந்தது.மாலை 6:00 மணிக்கு கடம் புறப்பாடாகி, கனகசபையில் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரிக்கு சகல திரவிய மகா பிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் தலைமையில் தீட்சிதர்கள் செய்திருந்தனர்.