காஞ்சி காமாட்சி கோயிலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தரிசனம்
ADDED :1201 days ago
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள் கோயிலில் மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நேற்று (10ம் தேதி) தரிசனத்திற்காக வந்தார். அவர்களை கோவிலின் சார்பாகவும், காஞ்சி காமகோடி பீடத்தின் சார்பாகவும், திரு சுந்தரேச ஐயர், ஆடிட்டர் திரு ஜி சேகர், ஆடிட்டர் திரு கே ஆர் சேகர் ஆகியோர் வரவேற்றனர். மேலும் ஆலய அர்ச்சகர்கள் சார்பாகவும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அம்மனின் தரிசனமும், ஆதிசங்கர சன்னதி தரிசனமும், வேத விற்பன்னர்களின் வேத கோஷத்துடன் செய்விக்கப்பட்டது. பிறகு , ஆலயத்தின் முறைப்படி பிரசாதமும், மரியாதைகளும் அளிக்கப்பட்டது. அம்மன் தரிசனத்திற்கு பிறகு அன்று இரவே புது டில்லி திரும்பினார்.