உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகோபில வரதராஜ பெருமாள் திருக்கல்யாண உற்சவம்

அகோபில வரதராஜ பெருமாள் திருக்கல்யாண உற்சவம்

பழநி: பழநி,பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி மாத பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

பழநி கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்சவ திருவிழா செப்.4ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று (செப்.10ல்) மாலை 6:17மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத அகோபில வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இன்று (செப்.11ல்) இரவு பாரிவேட்டை நடைபெறும். செப்.12ல் காலை 7:15 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. ஆவணி பிரம்மோற்சவ விழாவில் செப். 13ல் கொடியிறக்குதல் நடைபெறும். செப.14ல் விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவடையும். இந்நிகழ்ச்சியில் கண்காணிப்பாளர் அழகர்சாமி கலந்து கொண்டார் நிகழ்ச்சி ஏற்பாடுகள் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !