ஏடகநாதர் சுவாமி கோயிலில் வைகையில் ஏடு எதிரேறிய விழா
ADDED :1280 days ago
சோழவந்தான், திருவேடகம் ஏலவார்குழலியம்மன் சமேத ஏடகநாதர் சுவாமி கோயிலில் ஏடு எதிரேறிய திருவிழா நடந்தது. நேற்று இரவு கோயிலில் இருந்து விநாயகர், திருஞானசம்பந்தர், அமைச்சர் குலைச்சிறை நாயனார் வெண் குதிரையில் பவனி வந்து வைகையில் எழுந்தருளினர். பின் ஆற்றில் தங்கத்தால் செய்த திருப்பாசுர ஏட்டை சப்பரத்தில் வைத்து, சிவனடியார்கள் வேதம் முழங்க ஏடு எதிரேறும் விழா நடந்தது. தமிழகத்தில் இங்கு மட்டுமே இவ்விழா நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் சேவுகன் செட்டியார், செயல் அலுவலர் சரவணன் மற்றும் கோயில் ஊழியர்கள், பிரதோஷ கமிட்டியினர் செய்திருந்தனர்.