உலக நன்மை வேண்டி சிறப்பு யாக வேள்வி பூஜை
ADDED :1201 days ago
கமுதி: கமுதி எட்டுக்கண் பாலம் அருகே சக்தி அம்மன் கோயிலில் ஆவணி மாத பெளர்ணமி முன்னிட்டு சிறப்புபூஜை நடந்தது.மூலவரான சக்தி அம்மனுக்கு பால்,சந்தனம்,மஞ்சள், இளநீர்,திரவிய பொடிகள் உட்பட 21 வகையான அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது.பின்பு ஓம் சக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் உலக நன்மை வேண்டி, பருவமழை நன்கு பெய்து விவசாயம் செழித்திட சிறப்புயாக வேள்வி பூஜை நடந்தது. பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பு வேள்வி பூஜையில் வழிபட்டனர்.பின்பு ஓம் சக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பூஜையில் கமுதி அதனை சுற்றியுள்ள கிராமமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.