உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாரம்பரியம் நோக்கி மாணவர்கள் பயணம்

பாரம்பரியம் நோக்கி மாணவர்கள் பயணம்

விக்கிரமங்கலம்: மதுரை தானம் அறக்கட்டளை சார்பில் கோவில்பட்டியில் கல்லுரரி மாணவிகள் பங்கேற்ற பாரம்பரிய நிகழ்ச்சி நடந்தது. விக்கிரமங்கலம் கருப்பு கோயிலில் இருந்து மாணவிகள் கிராம மக்களுடன் கும்மிபாட்டு பாடி முளைப்பாரி எடுத்து பழமையான மருதோதையை ஈஸ்வரமுடையார் கோயிலுக்கு ஊர்வலமாக வந்து பார்வையிட்டனர். பாரம்பரிய புத்தக வெளியீடு,கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 10 கல்லுரரிகளின் 150 மாணவிகள் பங்கேற்றனர். தானம் கல்வி நிலைய இயக்குனர் குருநாதன், ஒருங்கிணைப்பாளர் சசிகலா, சுற்றுலா ஆலோசகர் பாரதி, மாணவர் ஒருங்கிணைப்பாளர் ஹலீஷ் ரகுமான், கிராம நிர்வாகிகள் கண்ணன், செல்வம், பழனிவேல், காட்டுராஜா, ஜோதி, ராமலிங்கம் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !