உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையத்தில் வரசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.

நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்கு சிவன் பார்வதி, வள்ளி தெய்வானை சுப்பிரமணியர், தென்முக பரமன், லிங்கேத்பவர், அனுமன், துர்க்கை அம்மன், காலபைரவர், நான்முகன், நவ நாயகர்கள் அனைத்துக்கும் தனித்தனி கோபுரம் மற்றும் சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன. கும்பாபிஷேக விழா, 10ம் தேதி மங்கல இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து, தீர்த்த குடம், முளைப்பாரி, காலை வேள்வி, எண் வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை மங்கள இசையுடன் வேள்வி சாலை வழிபாடு, பரிவார மூர்த்தங்கள், விமானங்களுக்கு திருக்குட நன்னீராட்டு, நான்காம் கால வழிபாடு நடந்தது. கும்பாபிஷேக விழா நேற்று காலை, 9.30 மணிக்கு நடந்தது. தொடர்ந்து சிறப்பு திருமஞ்சனம், அலங்கார பூஜை, பேரொளி வழிபாடு நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !