சோழவந்தான் கோயில்களில் கும்பாபிஷேகம்
ADDED :1220 days ago
சோழவந்தான்: மேலமாத்துரர் அருகே மார்நாடு கருப்பண சுவாமி, காமாட்சியம்மன்னை குலதெய்வமாக வழிபடும் காமாட்சிபுரம் மக்களின் பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை யாக பூஜையை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றினர். பாலகணபதி, பாலலிங்கம் மயுரவாகமை பலிபீடம், கருப்பண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிழக்குதெரு மக்கள் செய்திருந்தனர். சமயநல்லுரரில் ராதாகிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை யாதவ சமுதாய மக்கள் செய்திருந்தனர்.