உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீனிவலசையில் சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

சீனிவலசையில் சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

சேதுக்கரை: சேதுக்கரை அருகே சீனிவலசையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் முதல் காலயாக சாலை பூஜையுடன் விழா துவங்கியது. பூர்ணாகுதி, தீபாராதனை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாவாஜனம் உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று காலை 7 மணி அளவில் சித்தி விநாயகர் கோயில் விமான கலசத்தில் கோபால ராமன் ஐயங்கார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். மூலவர் சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சீனிவலசை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !