திருச்செந்தூர் உண்டியல் காணிக்கை ரூ 2 கோடியே 4 லட்சம்
ADDED :1153 days ago
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. ரூ 2 கோடியே 4 லட்சம் பணமும் 2 கிலோ 225 கிராம் தங்கமும் கிடைத்தன.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாதம் தோறும் இரு முறை உண்டியல் எண்ணப்படுகிறது. செப்டம்பர் மாதத்தின் முதல் கட்டமாக நேற்று உண்டியல் எண்ணப்பட்டது. அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமை வைத்தார். இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர்கள் அனிதா குமரன், செந்தில் முருகன், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவகாசி பதினெண் சித்தர் மடம் குரு குல வேத பாடசாலை உழவாரப் பணி குழுவினர் உண்டியல் என்னும் பணியில் ஈடுபட்டனர். ரொக்க பணம் ரூ 2 கோடியே 4 லட்சத்து 74 ஆயிரத்து 806 இருந்தது. தங்கம் 2 கிலோ 225 கிராம், வெள்ளி 15 கிலோ 250 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 426 இருந்தன.