உலகேஸ்வர சுவாமி கோயில் மண்டல பூஜை சிறப்பு அலங்காரம்
ADDED :1154 days ago
பல்லடம்: அல்லாளபுரம் உலகேஸ்வர சுவாமி, மற்றும் கரிய காளியம்மன் கோவில்கள் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மண்டல பூஜை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
பல்லடம் அருகே, அல்லாளபுரம் உண்ணாமுலை அம்மன் உடனமர் உலகேஸ்வர சுவாமி, மற்றும் கரிய காளியம்மன் கோவில்கள் கும்பாபிஷேக விழா செப்., 8ம் தேதி நடந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, 45 நாட்களும் தினசரி மண்டல பூஜை நடந்து வருகிறது. நேற்று காலை, 5.00 மணி முதல் கரிய காளியம்மன் கோவிலில் நடந்த மண்டல பூஜை முன்னிட்டு, பரிவார தேவதைகள், மற்றும் கரிய காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் கரிய காளியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.