உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாவடிப்பண்ணை முத்தாரம்மன் கோயில் திருமால் பூஜை

மாவடிப்பண்ணை முத்தாரம்மன் கோயில் திருமால் பூஜை

ஏரல்: மாவடிபண்ணை முத்தாரம்மன் கோயில் திருமால் பூஜை (கொடை விழா) கோலாகலமாக நடந்தது. மாவடிபண்ணை 18 பங்கு நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முத்தாரம்மன் கோயில் திருமால் பூஜை நிகழ்ச்சிகள் கடந்த 11ம் தேதி துவங்கியது. அன்று இரவு வில்லிசை, அலங்கார பூஜை நடந்தது. 12ம் தேதி காலை, மதியம், இரவு அலங்கார பூஜை, மேள கச்சேரி, குடிஅழைப்பு நடந்தது. கொடை விழா அன்று காலை செண்டை மேள வாத்தியங்களுடன் பால்குடம் எடுத்து வருதல், மதியம் சிறப்பு பூஜை, மதியம் சிறப்பு அலங்காரத்துடன் மதிய கொடை, இரவு முளைப்பாரி எடுத்தல், நேமிசம் கொண்டு வருதல் மற்றும் கரகாட்டம் நடந்தது. இரவு 12 மணிக்கு முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையை தொடர்ந்து வாணவேடிக்கையும் அதைத் தொடர்ந்து அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி நகர் உலா கழ்ச்சி முக்கிய நிகழ்ச்சியாக நடந்தது. விழாவில் சென்னை மற்றும் பல பகுதிகளிலிருந்து 18 பங்கு நாடார் பொதுமக்கள், தொழிலதிபர்கள், மாவடிபண்ணை மற்றும் சுற்று வட்டார துமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இரவு இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை 18 பங்கு நாடார் சமுதாய துமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !