அழகுவள்ளி அம்மன் கோயிலில் சாக்கு வேடமணிந்து வினோத வழிபாடு
ADDED :1329 days ago
கமுதி: கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் அழகுவள்ளி அம்மன் கோயில் பொங்கல் மற்றும் முளைப்பாரி விழா நடந்தது.செப்.14 தேதி பக்தர்கள் வினோதமான முறையில் உடலில் ஊசி குத்தியும், உடல் முழுவதும் சேறு பூசி சேத்தாண்டி வேடம் அணிந்து வந்தனர்.அக்னிசட்டி, பால்குடம் எடுத்து வந்து பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்பு அழகுவள்ளி அம்மனுக்கு பால், சந்தனம்,மஞ்சள் உட்பட 21 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று நிறைவுநாள் நிகழ்ச்சியாக பருவமழை நன்குபெய்து விவசாயம் செழிக்க வேண்டி பக்தர்கள் சாக்கு வேடமணிந்து கிராமத்தில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து அழகுவள்ளி அம்மன் வழிப்பட்டனர்.பின்பு ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும், பெண்கள் கும்மியடித்தனர். கமுதி சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.