வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகை விழா
ADDED :1196 days ago
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஏழு அடி உயரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.இங்கு, கிருத்திகை விழாவை முன்னிட்டு நேற்று காலை மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்திலும், உற்சவர் மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.