ஆவணி கார்த்திகை : ராமநாதபுரம் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ADDED :1197 days ago
ராமநாதபுரம், ஆவணி மாத கார்த்திகையை முன்னிட்டு ராமநாதபுரம் பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அபிேஷக, வழிபாடு, அன்னதானம் நடந்தது. நேற்று கார்த்திகையை முன்னிட்டு ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் காலை, மாலை நேர பூஜைகளில் பால், தயிர், சந்தனம், பழங்களால் சுவாமிக்கு அபிேஷகம் நடந்தது. இதே போல வழிவிடுமுருகன் கோயில், குமராய்யா கோயில், வெளிப்பட்டிணம் பாலசுப்பிரமணிய சுவாமி, பாலதண்டயுத சுவாமி கோயில், பட்டணம்காத்தான் கலெக்டர் அலுவலகம்அருகே வினை தீர்க்கும் வேலவர் கோயிலில் அபிேஷகம், பூஜைகள், அன்னதானம் நடந்தது.