உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கற்பக விநாயகர் கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா

கற்பக விநாயகர் கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா

மோகனூர்: கலைவாணி நகர் கற்பக விநாயகர் கோவிலில் நேற்று நடந்த கும்பாபிஷேக விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர்.மோகனூர், கலைவாணி நகரில், மிகுந்த பொருட்செலவில் கற்பக விநாயகர் கோவில் அமைக்கும் பணி, கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், கும்பாபிஷேகம் செய்ய விழாக்குழுவினர் முடிவு செய்தனர்.விழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை 4 மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்யாக வாசனம், இரண்டாம் காலயாக பூஜை, நாடி சந்தானம், மகா பூர்ணாகுதி, தீபாராதனை, கலசம் புறப்பாடு நடந்தது. காலை 6 மணிக்கு கற்பக விநாயகர் ஆலயத்துக்கு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து, அபிஷேகம், ஸ்வாமி தரிசனம், தீபாராதனை, பிரசாதம வழங்குதல் உள்ளிட் நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை, திருப்பணி குழுவினர் மற்றும் கலைவாணி நகர், பாரதி நகர் வடக்கு, தெற்கு, பிள்ளையார் நகர் பொதுமக்கள் செய்துள்ளனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !