வடவெட்டியில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :5152 days ago
செஞ்சி: செஞ்சி தாலுகா வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.விழாவையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. மாலை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இரவு 11 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவை முன்னிட்டு இன்னிசை கச்சேரி, வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன.