முனீஸ்வரன் கோயில் வருடாபிஷேக விழா
ADDED :1186 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே பிச்சனார்கோட்டை முனீஸ்வரர் கோயில் வருடாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. தொடர்ந்து ஆட்டு கிடாய்கள் பலியிடப்பட்டு, பக்தர்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பிச்சனார் கோட்டை கிராமத்தினர் செய்திருந்தனர்.