உலக நன்மைக்காக ராமேஸ்வரம் கோயிலில் 2008 திருவிளக்கு பூஜை
ADDED :1183 days ago
ராமேஸ்வரம்: உலக நன்மைக்காக விவேகானந்த கேந்திரம் சார்பில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் 2008 திருவிளக்கு பூஜை நடந்தது.
ராமநாதபுரம் விவேகானந்த கேந்திரத்தின் கிராம முன்னேற்ற டிரஸ்ட் சார்பில், உலக நன்மைக்காகவும், இந்திய பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டியும் நேற்று மாலை ராமேஸ்வரம் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, பெண்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து, 2,008 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், கிராம முன்னேற்ற டிரஸ்ட் தலைவர் அய்யப்பன், பசுமை ராமேஸ்வரம் அமைப்பு நிர்வாகி ஸ்ரீதர், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.