தேய்பிறை அஷ்டமி : பைரவருக்கு சிறப்பு அலங்காரம்
ADDED :1186 days ago
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று முன்தினம் ஸ்ரீ ஸ்வர்ண ஆகாஷண பைரவருக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தது. இரண்டாவது நாளான நேற்றும் பைரவர் சிறப்பு அலங்காரத்திலேயே காட்சியளித்தார். தாடிக்கொம்பு, வேடசந்தூர், திண்டுக்கல் உள்ளிட்ட சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான மக்கள் பங்கேற்றனர்.