உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்து முனீஸ்வரர் கோயில் மண்டல பூஜை

முத்து முனீஸ்வரர் கோயில் மண்டல பூஜை

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே ஜெயங்கொண்டநிலையில் முத்து முனீஸ்வரர் கோயில் மண்டல பூஜை நடந்தது. செப். 7ம் தேதி இக்கோயில் கும்பாபிஷேம் நடைபெற்றதை தொடர்ந்து நேற்று காலை  9:00 மணிக்கு மண்டல பூஜை நடந்தது. யாக வேள்வி நடத்தப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து முத்து முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள்  அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !