உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியூரில் தேய்பிறை அஷ்டமி

மாரியூரில் தேய்பிறை அஷ்டமி

சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவள நிற வல்லியம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவருக்கு நேற்று மாலை 4  மணியளவில் பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பக்தர்கள் நெய் விளக்கு ஏற்றி, அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.  அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !