உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி விழா : கரூர், தான்தோன்றிமலை கோவிலில் குவிந்த பக்தர்கள்

புரட்டாசி விழா : கரூர், தான்தோன்றிமலை கோவிலில் குவிந்த பக்தர்கள்

கரூர்: புரட்டாசி மாதம் தொடங்கியதை ஒட்டி, கரூர், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், நேற்று பக்தர்கள் குவிந்தனர்.

தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், வரும் 27ல் புரட்டாசி விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதை தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு வாகனங்களில், சுவாமி திருவீதி உலாவும், அக்டோபர், 3ல் மாலை, 4:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 5ல் காலை, 9:15 மணிக்கு தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்நிலையில், புரட்டாசி மாதம் நேற்று தொடங்கியது. இதை ஒட்டி, அதிகாலை முதலே பக்தர்கள், கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் குவிந்தனர். பிறகு, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !