செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :1444 days ago
திருநெல்வேலி: செப்பறை கோயிலில் மாதாந்திர திருவாதிரை சிறப்பு பூஜை நடந்தது. நெல்லை அருகேயுள்ள ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் மாதந்தோறும் திருவாதிரை நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. புரட்டாசி மாத திருவாதிரையான நேற்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மதியம் அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.