உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வரும் 30ல் பந்தக்கால் முகூர்த்தம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வரும் 30ல் பந்தக்கால் முகூர்த்தம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும், 30-ல் கார்த்திகை தீபவிழா பந்தக்கால் முகூர்த்தம் நடக்க உள்ளது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா வரும், நவ., 27ல் சுவாமி சன்னதி முன்புள்ள தங்கக்கொடிமரத்தில்,   கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும் விழாவில்,  பஞ்சமூர்த்திகள், தினமும், வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். ஏழாம் நாள் விழாவில், டிச., 3ல் மகாரத ஓட்டம் நடக்க உள்ளது.   விழாவின் முக்கிய நிகழ்வான, வரும் டிச., 6-ல் அதிகாலை, 4:00 மணிக்கு, கோவில் கருவறையில்  எதிரில், பரணி தீபமும், மாலையில்,  2,668 அடி உயரமுள்ள  மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.  விழாவில், பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள, வரும், 30ல் பந்தக்கால் முகூர்த்தம் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு,  அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில், 30ல் அதிகாலை, 5:30 மணிக்கு மேல், 7:00 மணிக்குள் கன்னியா லக்கினத்தில்,  மங்கல இசை ஒலிக்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க,  பந்தக்காலுக்கு சிறப்பு  அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டு, ராஜகோபுரம் முன் பந்தக்கால் நடப்படும்.  இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !