உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும் 26ல் நவராத்திரி விழா தொடக்கம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும் 26ல் நவராத்திரி விழா தொடக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும், 26ல் நவராத்திரி விழா தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு, பராசக்தி அம்மன், ஆஸ்தான மண்டபத்திலிருந்து புறப்பட்டு வாண வேடிக்கைகளுடன், திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

தொடர்ந்து, 27ல் ராஜராஜேஸ்வரி அலங்காரம், 28ல் கெஜலட்சுமி அலங்காரம், 29ல் மனோன்மணி அலங்காரம், 30ல் ரிஷப வாகன அலங்காரம் மற்றும் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர், ஆகியவற்றிற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலிப்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது.  அக்., 1ல் ஆண்டாள் அலங்காரம், அக்., 2ல் சரஸ்வதி அலங்காரம், அக்., 3ல் லிங்க பூஜை அலங்காரம், 4ல் காலை, பஞ்ச மூர்த்திகள் அபிஷேகம் மற்றும் விஜயதசமி விழா கொண்டாட்டம்,  மஹிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பு, மாலை சரஸ்வதி பூஜை கொண்டாட்டம், பராசக்தி அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பு நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.  இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !