பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழா : அம்மனுக்கு அபிஷேகம்
ADDED :1149 days ago
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு நாடார் உறவின் முறை பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோயில் திருவிழா நடந்தது. மதுரை அழகர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. நையாண்டி மேளம் முழங்க பக்தர்கள் சக்தி கிரகம் எடுத்து வந்தனர். பின் மாவிளக்கு எடுத்து வழிபாடு நடத்தினர். தீச்சட்டி, பால்குடம், பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. மாறுவேஷங்களில் பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.