ராமேஸ்வரம் கோயிலில் கங்கை நீருடன் ஓ.பி.எஸ்., தரிசனம்
ADDED :1167 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் புனித கங்கை நீருடன் வந்த முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., சுவாமி தரிசனம் செய்தார்.
செப்., 18ல் ராமேஸ்வரம் திருக்கோயிலில் ஓ.பி.எஸ்., அவரது மகன் ஜெயபிரதாப் மற்றும் உறவினர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின் உ.பி., காசியில் உள்ள புனித கங்கை நீரில் நீராடி, காசி விஸ்வநாதரை தரிசித்தார். பின் அங்கிருந்து புனித கங்கை நீரை எடுத்து கொண்டு நேற்று மாலை ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தார். பின் சுவாமி சன்னதியில் ஓ.பி.எஸ்., புனித கங்கநீரை கொடுத்ததும், கோயில் குருக்கள் ராமநாதசுவாமிக்கு அபிஷேகம், பூஜை செய்தனர். இதில் ஓ.பி.எஸ்., மற்றும் மகன் ஜெயபிரதாப், தம்பி ராஜா, உறவினர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின் காரில் மதுரை புறப்பட்டு சென்றார்.