மாரியூர் சிவன் கோயிலில் மகாளய அமாவாசையில் மோட்ச தீபம் ஏற்றலாம்
ADDED :1167 days ago
சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூரில் பழமை வாய்ந்த பூவேந்திய நாதர் சமேத பவள நிறவல்லியம்மன் கோயில் உள்ளது.
இங்கு மஹாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள தலவிருட்சமான முன்னை மரத்திற்கு சிறப்பு ஹோமமும், உற்ஸவமூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனை, சுவாமி புறப்பாடு நடக்க உள்ளது. முன்வினை தீர, முன்னை வழிபட என்ற வாசகத்திற்கு ஏற்ப நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த முன்னை மரத்தின் அருகே பக்தர்கள் மோட்சதீபம் ஏற்றி முன்னோர்களுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.