காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு
ADDED :1222 days ago
காரமடை : காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி மாதம் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதிகாலை 4 மணிக்கு மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம். வென்பட்டுடுத்து ஸ்ரீதேவி பூதேவி சமேத வெள்ளி சிம்மாசனத்தில் திருக்கோவில் வலம் வந்து கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். உபநிஷத் வேதபாராயணம் அஷ்டோத்ரம் மங்கள ஆரத்தி சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து தீர்த்த பிரசாதம் உள்ளிட்டவை நடந்தது. இந்த வைபவத்தில் ஸ்தளர்த்தார்கள், அர்ச்சகர்கள் மிராசுதாரர்கள் நிர்வாகத்தினர் உள்ளிட்டவர்களுடன் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருக்கோவில் நிர்வாகம் சார்பில் இரவு வரை வரும் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.