காஞ்சிபுரம் கோவில் கோபுரத்தில் மரச்செடிகள் அகற்றம்
ADDED :1225 days ago
காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் பணாமுடீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் வேரூன்றி வளர்ந்து வந்த அரச மரச்செடிகள் வேருடன் அகற்றப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில், பணாமுடீஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவில் ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.இக்கோவில் ராஜகோபுரத்தின் உச்சியில் அரச மர செடி வளர்ந்து வந்தது. செடி வேரூன்றி வளர்வதால், கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் சேதமாகும் அபாயம் உள்ளது. இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில், கோபுரத்தில் வளர்ந்த செடிகள் வேருடன் அகற்றப்பட்டுள்ளன.